உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பணி நிறைவு பாராட்டு விழா

பணி நிறைவு பாராட்டு விழா

விருத்தாசலம் : மங்கலம்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை ராஜேஸ்வரிக்கு பணிநிறைவு பாராட்டு விழா நடந்தது.நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் காளமேகம் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் அல்லி வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர் மாலா வாழ்த்தி பேசினார். ஆசிரியை அனிதா தொகுத்து வழங்கினார்.அதில், பணி ஓய்வு பெறும் ஆசிரியை ராஜேஸ்வரி பணிகால சிறப்புகள், கற்பித்தல் திறன்குறித்து எடுத்துரைக்கப்பட்டது. ஆசிரியை ராஜேஸ்வரி ஏற்புரை வழங்கினார். ஆசிரியர்கள், மாணவர்கள் நினைவுப்பரிசு வழங்கினர். மதிய உணவு, இனிப்புகள்வழங்கப்பட்டன.அதில், பணி ஓய்வு பெற்ற ஆசிரியை ராஜேஸ்வரியின் கணவரான, முன்னாள் தலைமை ஆசிரியர் ரங்கசாமி, இப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டி, 2 லட்சம் ரூபாயை பள்ளி கல்வித்துறைக்கு தனது பங்களிப்பாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை