கலந்தாய்வு கூட்டம்
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம்வட்டாரத்திற்குட்பட்டஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்தாய்வு கூட்டம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடந்தது.கூட்டத்தில் ஸ்ரீமுஷ்ணம் வட்டார கல்வி அலுவலர்கள் மன்னர் மன்னன், இந்திரா ஆகியோர் கலந்து கொண்டு தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கினர். இதில் ஆசிரியர்கள் எமிஸ் தளத்தில் மாணவர்கள் தொடர்பாக உள்ள பதிவுகளை சரிபார்த்தல், அரசின் நலத்திட்ட உதவிகள் பதிவு செய்தல், இணையதள வசதி ஏற்படுத்துதல், கற்றல் கற்பித்தல் பணிகளை செம்மைப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளின் அவசியம் குறித்து பேசினார். இதில் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்துக்குட்பட்ட தொடக்க, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 80 பேர் கலந்து கொண்டனர்.