காப்பர் கம்பிகள் திருட்டு
கடலுார்; கடலுார் முதுநகர் அருகே டிரான்ஸ்பார்மரில் இருந்து 65ஆயிரம் ரூபாய் மதிப்பிலான காப்பர் கம்பிகள் திருடுபோனது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.கடலுார் செம்மங்குப்பம் ஐயனார் கோவில் அருகிலுள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்த 65கிலோ எடையுள்ள காப்பர் கம்பிகள், கடந்த 20ம் தேதி திருடுபோனது. இதுகுறித்து கடலுார் துறைமுகம் உதவி மின்பொறியாளர் மணிவண்ணன் கொடுத்த புகாரின் பேரில், கடலுார் முதுநகர்போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். திருடுபோன காப்பர் கம்பியின் மதிப்பு 65ஆயிரம் ரூபாய் ஆகும்.