உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கணவரை கொன்று செப்டிக் டேங்கில் மறைத்த பெண்ணுக்கு ஆயுள்; : கடலுார் கோர்ட் தீர்ப்பு

கணவரை கொன்று செப்டிக் டேங்கில் மறைத்த பெண்ணுக்கு ஆயுள்; : கடலுார் கோர்ட் தீர்ப்பு

கடலுார்: தன்னுடன் குடும்பம் நடத்தியவரை கொலை செய்து, செப்டிக் டேங்கில் மறைத்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலுார் கோர்ட் நேற்று தீர்ப்பு வழங்கியது.மயிலாடுதுறை அடுத்த கழுக்கானி முட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல் மகன் அய்யாபிள்ளை(எ) பூராசாமி,40; இவர் அப்பங்குளத்தைச் சேர்ந்த, விதவை பெண், பரிமளா என்பவருடன் திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தி வந்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.இந்நிலையில் பரிமளா, வீட்டு வேலைக்காக சிங்கப்பூர் சென்றதால், இருவரும் பிரிந்தனர். இந்நிலையில் பரிமளா வடலுார் ஆர்.கே.சிட்டியில் வசிப்பதை அறிந்த, பூராசாமி அங்கு சென்று அடிக்கடி தகராறு செய்து வந்தார்.அவ்வாறு, கடந்த 2019ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி குடிபோதையில் இருந்த பூராசாமி, பரிமளாவின் தாய் சரஸ்வதியை தாக்க முயன்றார். அதை பரிமளா தடுக்க தள்ளி விட்டதில் கீழே விழுந்த பூராசாமி, பின் தலையில் அடிபட்டு இறந்தார். உடன் பரிமளா, பூராசாமி உடலை செப்டிங் டேங்கில் போட்டு சிமென்ட் வைத்து அடைத்தார்.இந்நிலையில், பூராசாமியை காணவில்லை என அவரது அண்ணன் ராஜாராமன் அளித்த புகாரின் பேரில் வடலுார் போலீசார் விசாரித்தனர். அதனையறிந்த பரிமளா, பார்வதிபுரம் வி.ஏ.ஓ.விடம் சரணடைந்தார். அவர் அளித்த வாக்குமூலத்தின் பேரில், கொலையை மறைக்க உதவிய தாய் சரஸ்வதி, அரியலுார் மாவட்டம், உடையார்பாளையம் தமிழரசன், வடலுார் ராமலிங்கம் ஆகியோரை கைது செய்தனர்.தொடர்ந்து பரிமளா உள்ளிட்ட 4 பேர் மீது, கடலுார் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில், அரசு தரப்பில் கதிர்வேலன் ஆஜரானார்.வழக்கை விசாரித்த நீதிபதி ஷோபனாதேவி, பரிமளாவிற்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும், குற்றத்தை மறைத்த தமிழரசன்,42; ராமலிங்கம்,72; சரஸ்வதி,76; ஆகியோருக்கு 3 ஆண்டு சிறை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

பூவராகன்
மார் 08, 2025 09:43

திருமணம் ஆகாம குடும்பம் நடத்தியிருக்காங்க. அப்புறம் எப்பிடி கணவரைக் கொன்ற ந்னு செய்தி போடலாம்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை