உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சைக்கிளில் சென்றவர் பைக் மோதி பலி

சைக்கிளில் சென்றவர் பைக் மோதி பலி

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே சைக்கிளில் சென்ற விவசாயி, பைக் மோதி இறந்தார்.நெல்லிக்குப்பம் அடுத்த கீழ்அருங்குணத்தைச் சேர்ந்தவர் நடேசன், 70; விவசாயி. இவர் நேற்று முன்தினம் சைக்கிளில் பண்ருட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தார். பாரதி நகர் அருகே சென்றபோது எதிரே வந்த பைக் நடேசன் சைக்கிள் மீது மோதியது.இதில் படுகாயமடைந்த நடேசன் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர், நேற்று காலை இறந்தார். நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !