உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / லால்புரத்தில் சுகாதார நிலையம் ஒன்றிய கூட்டத்தில் கோரிக்கை

லால்புரத்தில் சுகாதார நிலையம் ஒன்றிய கூட்டத்தில் கோரிக்கை

புவனகிரி : லால்புரம் ஊராட்சியில் சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என, அ.தி.மு.க., கவுன்சிலர் ஒன்றியக்குழு கூட்டத்தில் கோரிக்கை வைத்தார்.மேல்புவனகிரி ஒன்றிய குழுக் கூட்டம், சேர்மன் சிவப்பிரகாசம் தலைமையில் நேற்று நடந்தது. துணை சேர்மன் வாசுதேவன், பி.டி.ஓ.,க்கள் வனிதா, பழனிசாமிராஜன் முன்னிலை வைத்தனர். மேலாளர் சந்தோஷ்குமார் வரவேற்று திட்ட அறிக்கை வாசித்தார். அ.தி.மு.க., கவுன்சிலர் லாதா ராஜேந்திரன் பேசுகையில், லால்புரத்தில் இயங்கிய அம்மா மினி கிளினிக்கினால் சுற்றுபகுதியினர் பயன் பெற்றனர். தற்போது கிளினிக் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, சுற்றுபகுதி பொதுமக்கள் பயன்பெறும் நோக்கில் சுகாதார வளாகம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தொடர்ந்து நடந்த கூட்டத்தில், இதுவரை நடந்து முடிந்த பணிகள், மேற்கொள்ள பணிகள் மற்றும் செலவினங்கள் மன்ற ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது. மேலாளர் தவுலத்பானு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை