உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம் : மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை மாற்றி அமைத்ததை கண்டித்து,வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், விருத்தாசலம் பொதுத்துறை வங்கியை முற்றுகையிட்டுஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு, மூத்த வழக்கறிஞர் பூமாலை குமாரசாமி தலைமை தாங்கினார்.வழக்கறிஞர் சங்கங்களின் தலைவர்கள் சாவித்திரி செந்தில்குமார், விஜயகுமார், சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில்,சங்க செயலர்கள் சங்கர் கணேஷ், ரமேஷ், சுரேஷ், மூத்த வழக்கறிஞர் செல்வபாரதி, சங்கரய்யா, ஆனந்த கண்ணன், புஷ்பதேவன், ஜெயபிரகாஷ், அறிவுடைநம்பி, அசோக்குமார், ரவிச்சந்திரன், இளையராஜா, குமரகுரு, மோகன், சிவசங்கர், செந்தில், சிவக்குமார், திருநாவுக்கரசு, சதீஷ், ஜெயராஜ், தன்ராஜ், ஜென்னி, ஜெயஸ்ரீ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.விருத்தாசலம் பாலக்கரையில் இருந்து கடலுார் சாலை வழியாக ஊர்வலமாக வந்த வழக்கறிஞர்கள், ஸ்டேட் பேங்கை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி