உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெண்ணையாற்றில் வட்ட சில்லுகள் கண்டெடுப்பு

பெண்ணையாற்றில் வட்ட சில்லுகள் கண்டெடுப்பு

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த வாழப்பட்டு தென்பெண்ணையாற்றில், பழங்கால சுடுமண் பொம்மை மற்றும் வட்ட சில்லுகள் கண்டெடுக்கப்பட்டன.கடலுார் மாவட்டம் பண்ருட்டி அடுத்த வாழப்பட்டு தென்பெண்ணையாற்றில், தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல், மணமேடு பகுதியை சேர்ந்த சசிதரன், சீனுவாசன் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சிதைந்த முதுமக்கள் தாழிகள், உறை கிணறு, சுடுமண் பொம்மை, அகல் விளக்கு, வட்ட சில்லு, சோழர் கால மற்றும் ஆங்கிலேயர் காலத்து செப்பு நாணயங்கள் கிடைத்தன.இது குறித்து இம்மானுவேல் கூறியதாவது:கண்டெடுக்கப்பட்டுள்ள சுடுமண் பொம்மைகள், வட்ட சில்லுகளை வைத்து பார்க்கும் போது, வாழப்பட்டு தென்பெண்ணை ஆற்றங்கரை பகுதிகளிலும், பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் தடயங்கள் கிடைத்துள்ளன.இதில், சோழர், ஆங்கிலேயர் கால செப்பு நாணயங்கள் சிதைந்த நிலையில் உள்ளதால், எந்த ஆண்டு என சரியாக கூற இயலவில்லை. ஏற்கனவே காவனுார், எனதிரிமங்கலம் ஆற்றங்கரை பகுதிகளில் பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

கற்கால கைக்கோடாரி

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த பாண்டூரில் அரசு மேல்நிலைப் பள்ளி வரலாற்று ஆசிரியர் வடிவேல்.தொல்லியல் ஆர்வலரான இவர், பழங்கால மனிதரின் வாழ்க்கை முறை, அவர்கள் பயன்படுத்திய கற்கால கருவிகள் பாலாற்றுப் படுகையில் கிடைப்பது குறித்து, அப்பள்ளி மாணவ - மாணவியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அவற்றை அகழாய்வு வாயிலாக கண்டெடுப்பது குறித்து, மாணவ - மாணவியருக்கு விளக்கி, பயிற்சியும் அளித்து வருகிறார்.அவ்வாறு பயிற்சி பெற்ற, 10ம் வகுப்பு மாணவர் மணிகண்டன், இரும்புலிச்சேரி ஆற்றுப்படுகையில், புதிய கற்கால கைக்கோடாரியை அண்மையில் கண்டெடுத்தார். அதை ஆய்வு செய்த ஆசிரியர் வடிவேல், 8,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட புதிய கற்காலத்தைச் சேர்ந்த கைக்கோடாரி கற்கருவி என்பதை அறிந்தார்.''அக்கருவி, 10 செ.மீ., நீளம்; 4.7 செ.மீ., அகலத்தில், குறுகிய பட்டையுடன் உள்ளது. மிருக வேட்டைக்கான ஆயுதமாகவும், விவசாய நிலத்தை சமன்படுத்தும் உபகரணமாகவும் பயன்படுத்தியிருக்கலாம்,'' என்று, வடிவேல் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை