மேலும் செய்திகள்
சுதந்திர தினவிழா தொடர்ச்சி.......
16-Aug-2024
காட்டுமன்னார்கோவில்: குமராட்சி அருகே பூலாமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, வீராணம் லேக் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் குடை வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் ஸ்ரீதேவி தலைமை தாங்கினார். குமராட்சி வட்டார கல்வி அலுவலர் நடராஜன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் இளவரசன், ஊராட்சி தலைவர் சுமதி முன்னிலை வகித்தனர். வீராணம் லேக் சிட்டி ரோட்டரி திட்ட தலைவர் ஷகிலா, சங்க தலைவர் ரவிச்சந்திரன், சங்க செயலாளர் ஹென்றி, சுற்றுச்சூழல் மாவட்ட தலைவர் இளங்கோவன், மாவட்ட துணை ஆளுநர் ஆரோக்கியதாஸ் ஆகியோர் பங்கேற்று, 25 ஆயிரம் மதிப்பில், 140 குடைகளை, பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கினர். சங்க உறுப்பினர்கள், பழனிவேல், சத்தியசீலன், ராஜேந்திரன், காளிதாஸ், திருமுருகன், பள்ளி ஆசிரியர்கள் அன்பு செழியன், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆசிரியை சங்கீதா நன்றி கூறினார்.
16-Aug-2024