தி.மு.க., அன்னதானம்
சிதம்பரம்: சிதம்பரம் அடுத்த சாமியார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தி.மு.க., மாவட்ட பொருளாளர் கதிரவன் அன்னதானம் வழங்கினார்.தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் மாசி மக விழாவையொட்டி, பரங்கிப்பேட்டை ஒன்றிய தி.மு.க., சார்பில் சாமியார் பேட்டை, வேளங்கிராயன் பேட்டை, புதுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் அன்னதானம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், தி.மு.க., மாவட்ட பொருளாளர் கதிரவன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் முத்துபெருமாள், ஓவிஸ் கிருஷ்ணகுமார், அவைத்தலைவர் ராஜாராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.