உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தி.மு.க., தண்ணீர் பந்தல் திறப்பு

தி.மு.க., தண்ணீர் பந்தல் திறப்பு

கிள்ளை; புவனகிரி ஒன்றிய தி.மு.க., சார்பில், லால்புரம், புவனகிரி பாலம், பஸ் நிலையம், பங்களா உட்பட நான்கு இடங்களில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது.புவனகிரி கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் டாக்டர் மனோகர் தலைமை தாங்கினார். கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க., பொருளாளர் கதிரவன் பங்கேற்று, தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, இளநீர், ரோஸ்மில்க், மோர் உள்ளிட்டவைகளை வழங்கினார். தொடர்ந்து, பேராசிரியர் அன்பழகன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.நிகழ்ச்சியில், புவனகிரி நகர செயலாளர் கந்தன், ஒன்றிய அவைத் தலைவர் மாறன், பொதுக்குழு உறுப்பினர் வெற்றிவேல், பொறியாளர் அணி ராமன், துணை செயலாளர் குமரவேல், பொருளாளர் மேகநாதன், ரவி, ஜெகதீசன்,ரங்கபாணி, நிர்வாகிகள் எழில்வேந்தன், பன்னீர்செல்வம், நடராஜன், அரவிந்தன், சண்முகம், மணிமாறன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை