உள்ளூர் செய்திகள்

கண்கள் தானம்

புவனகிரி: புவனகிரியில் இறந்த மூதாட்டியின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது. புவனகிரி செல்லப்பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விவசாயி மணி. இவரது மனைவி சரோஜா, 65; உடல் நலக்குறைவால் நேற்று அதிகாலை இறந்தார். இவரது கண்களை தானமாக வழங்க அவரது குடும்பத்தினர் முன் வந்தனர். புவனகிரி அரிமா சங்க நிர்வாகிகள் மூலம் அரவிந்தர் கண் மருத்துவமனைக்கு மூதாட்டியின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !