உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் மாணவர்களுக்கு டி.எஸ்.பி., அட்வைஸ்

படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் மாணவர்களுக்கு டி.எஸ்.பி., அட்வைஸ்

பண்ருட்டி: பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.தலைமை ஆசிரியர் ஆலமர்செல்வம் தலைமை தாங்கினார். பள்ளி வளர்ச்சி குழு உறுப்பினர் பழனி, முன்னிலை வகித்தார். உதவி தலைமை லட்சுமிகாந்தன், ஆசிரியர் ராஜா வரவேற்றனர். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் சண்முகவள்ளி பழனி பெண்கள் நடந்துகொள்ள வேண்டிய வழிமுறை குறித்து மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.கூட்டத்தில் டி.எஸ்.பி., ராஜா கலந்து கொண்டு பேசியதாவது:அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு முன்னுரிமை வழங்கி வருகிறது. தமிழில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு தேர்வாணையம் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குகிறது. டி.என்.பி.எஸ்.சி., - குரூப் -1, 2 தேர்வில் மாணவர்கள் அதிகளவில் பங்குபெற வேண்டும்.பெற்றோர்கள் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து படிக்க வைக்கின்றனர். பெற்றோர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து படிப்பதில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும். பதட்டம் இல்லாமல் தேர்வு எழுத வேண்டும்.அதுபோல் 18 வயதுகுட்பட்ட மாணவர்கள் இரு சக்கர வாகனங்கள் ஓட்டினால் பெற்றோர் மீது வழக்குப் பதிந்து 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். போதை பொருட்கள் உட்கொள்ளக்கூடாது. போதை பொருட்கள் விற்பனை குறித்து தகவல் தெரிந்தால் தெரிவிக்கவும். தகவல் அளிப்பவரின் விபரம் பாதுகாக்கப்படும். மாணவர்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி