வாகனம் மோதி முதியவர் பலி
சிதம்பரம்: சிதம்பரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் ஒருவர் இறந்தார். சிதம்பரம் அடுத்த அழிஞ்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் துரைராஜ், 62. இவர், நேற்று காலை 6:00 மணி அளவில் ராகவேந்திரா கல்லுாரி மேம்பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி, துரைராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.விபத்து குறித்து சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.