உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மாணவ தலைவர் தேர்தல்

ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மாணவ தலைவர் தேர்தல்

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அடுத்த ஆதிவராகநல்லுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ தலைவர் தேர்தல் நடந்தது. இதில் வாக்களிப்பது நமது கடமை மற்றும் உரிமை, வாக்களிப்பதன் அவசியம், முக்கியத்துவம், தலைமைப்பண்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.தொடர்ந்து மாணவ தலைவர் தேர்தல் நடந்தது. இதில் தலைமை ஆசிரியர் சிவகாமி, ஆசிரியர்கள் அருள்வடிவேலன், மாலதி, ஜெயக்குமார், அருள்மேரி, சக்கிபிரியா உள்ளிட்ட ஆசிரியர்கள் வாக்குச்சாவடி அலுவலர் மற்றும் தேர்தல் அதிகாரிகளாக செயல்பட்டு தேர்தலை நடத்தினர்.மாணவ தலைவராக அனுஷியா என்ற மாணவி தேர்ந்தெடுக்கப்பட்டார். வெற்றி பெற்ற மாணவி அனுஷியா வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து, பள்ளியின் எதிர்கால திட்டங்கள் குறித்து பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ