உள்ளூர் செய்திகள்

பெண் தற்கொலை

பண்ருட்டி: பண்ருட்டி அருகே திருமணமாகி 18 மாதங்களே ஆன இளம்பெண் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.குறிஞ்சிப்பாடி அடுத்த தம்பிபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் கருணாகரன். என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளி. இவரது மனைவி சரண்யா, 28; இவர்களுக்கு கடந்த 18 மாதங்களுக்கு முன் திருமணமாகி, ஒன்றரை வயதில் தர்ஷன் என்ற குழந்தை உள்ளார். கடந்த 3ம் தேதி தனது தாய் வீட்டிற்கு தடுப்பூசி போடுவதற்கு சென்ற சரண்யா, நேற்று துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை