முதல் உதவி பயிற்சி செயல் விளக்கம்
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக, இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் நுண்ணுயிரியல் துறை சார்பில், பல்வேறு முதல் உதவி சிகிச்சை பற்றிய செயல் விளக்கம் மற்றும் இரத்த தானத்தின் முக்கியத்துவம் குறித்த செயல் விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அறிவியல் புலத்தில் உள்ள ஹை-டெக் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அறிவியல் புல தலைவர் ஶ்ரீராம் தலைமைதாங்கினார். நுண்ணுயிரியல் துறை தலைவர் சுமதி வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் வாழ்த்துரை வழங்கினார். திட்ட அலுவலர் கணேஷ் நன்றி கூறினார். பயிற்சியில் 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் பங்கேற்றனர். பயிற்சியை கடலுார் அரசு செவிலியர் கல்லுாரி விரிவுரையாளர்கள் சசிரேகா செந்தில்குமார், சங்கீதா, கொளஞ்சிநாதன் மற்றும் துறை சார்ந்த ஊழியர்கள் பங்கேற்றனர்.