உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தமிழ் மன்ற அறக்கட்டளை முதியோர் இல்லத்திற்கு நிதி

தமிழ் மன்ற அறக்கட்டளை முதியோர் இல்லத்திற்கு நிதி

சேத்தியாத்தோப்பு, : சேத்தியாத்தோப்பு தமிழ் மன்ற அறக்கட்டளை நிறுவனம் சார்பில் ஆதரவற்ற குழந்தைகள், முதியோர் இல்லத்திற்கு நிதியுதவி உணவு பொருட்கள் வழங்கினர்.அவினாசியில் உள்ள சமாதான குழந்தைகள், முதியோர் இல்லம் கடந்த 25 ஆண்டுகளாக சீடு அறக்கட்டளை தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறது. இங்கு, 25 ஆதரவற்ற குழந்தைகள் முதியோர்கள் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு உடை, உள்ளிட்டவைகள் அளித்து பராமரித்து வருகின்றனர்.சேத்தியாத்தோப்பு தமிழ்மன்ற அறக்கட்டளை சார்பில் 10 ஆயிரம் ரூபாய் நிதி, இரண்டு கம்ப்யூட்டர், நாற்காலிகள், உணவு பொருட்களை நிறுவன தலைவர் ஆனந்தன், நிதி அறங்காவலர் தாமரைச்செல்வன், ஒருங்கிணைப்பாளர்கள் ராஜசேகர், கோபிநாதன் ஆகியோர் சீடு நிறுவன தலைவர் சதாகலாராணியிடம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி