மேலும் செய்திகள்
ஓசூரில் 10 அடிக்கு மேல் விநாயகர் சிலை வைக்க தடை
03-Aug-2024
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் விநாயகர் சதுர்த்தி விழா அமைப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.டி.எஸ்.பி., கிரியாசக்தி தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் விருத்தாசலம் முருகேசன், மங்கலம்பேட்டை சந்திரசேகரன், பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் பாக்யராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இன்ஸ்பெக்டர் சந்துரு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வாசித்தார்.கூட்டத்தில் டி.எஸ்.பி., கிரியா சக்தி பேசுகையில், விநாயகர் சிலை வைப்பதற்கு வருவாய்த்துறை, காவல்துறை அனுமதி பெற வேண்டும். ரசாயனம் கலக்காத விநாயகர் சிலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.விநாயகர் சிலை அமைப்பாளர்கள், 24 மணி நேரமும் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ள இடங்களில் பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டும். 10 அடிக்கு மேல் விநாயகர் சிலைகள் அமைக்க அனுமதி இல்லை.சர்ச், மசூதி உள்ள பகுதிகளில் சிலை வைக்க அனுமதி இல்லை. விநாயகர் சிலை ஊர்வலங்கள் நடைபெறும் பகுதிகளில் சி.சி.டி.வி., கேமராக்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஊர்வலத்தின் போது கோஷங்கள் எழுப்புவது, வண்ணப் பொடிகள், வண்ண கலவைகள் கலந்த தண்ணீரை பொதுமக்கள் மீது தெளிப்பது போன்றவைகளுக்கு அனுமதி கிடையாது.விழா அமைப்பாளர்கள் தங்களது ஆதார் கார்டு ஜெராக்ஸ் மற்றும் செல்போன் எண்களை போலீஸ் அனுமதி பெறும்போது போலீஸ் நிலையத்தில் வழங்க வேண்டும்' என்றார்.கூட்டத்தில், விருத்தாசலம், மங்கலம்பேட்டை, பெண்ணாடம், கருவேப்பிலங்குறிச்சி, கம்மாபுரம், ஆலடி போலீஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் விழா அமைப்பு நிர்வாகிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.
03-Aug-2024