உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / டென்னிஸ், சாப்ட் டென்னிசில் சாதிக்கும் அரசு பள்ளி மாணவி

டென்னிஸ், சாப்ட் டென்னிசில் சாதிக்கும் அரசு பள்ளி மாணவி

கடலுார் : கடலுாரைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவி டென்னிஸ் மற்றும் சாப்ட் டென்னிஸ்சில் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.கடலுார் குண்டு உப்பலவாடியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. டெய்லரிங் வேலை செய்கிறார். இவரது மகள் சத்தியப்பிரியா,17; கடலுார் வேணுகோபாலபுரம் வரதம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் கடந்த 2 ஆண்டுகளாக டென்னிஸ் மற்றும் சாப்ட் டென்னிஸ் பயிற்சி பெற்றுவருகிறார். இவர் 2024ம் ஆண்டு சேலத்தில் நடந்த சீனியர் லெவல் சாப்ட் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கமும், முன்னதாக ஜூனியர் லெவல் சாப்ட் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கமும் வென்றார்.மேலும் இந்திய பள்ளிகள் விளையாட்டுக்குழுமம் சார்பில் 2025ல் நடந்த தேசிய அளவிலான போட்டியில் கால் இறுதி வரை முன்னேறினார். டென்னிஸ் பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள் மாநில அளவிலான போட்டிகள் பங்கேற்றார். மாணவி குறித்து பயிற்சியாளர் அப்பாதுரை கூறுகையில், குறுகிய காலத்தில் பயிற்சி பெற்று தேசிய போட்டிகளில் பங்கேற்கும் அளவிற்கு திறமையானவர். டென்னிஸ் போட்டிகளில் கடலுார் மாவட்டத்திலிருந்து தேசிய போட்டிக்கு தகுதி பெற்ற இரண்டாவது மாணவி இவர். அரசு பள்ளியில் பயின்றாலும் சாதிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை