உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆற்றில் மிதந்து வந்த சிலை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைப்பு

ஆற்றில் மிதந்து வந்த சிலை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைப்பு

காட்டுமன்னார்கோவில்: கொள்ளிடம் ஆற்றில் மிதந்து வந்த அம்மன் சிலை மீட்டு, தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப் பட்டது.காட்டுமன்னார்கோவில் அடுத்த முள்ளங்குடி கிராமத்தை சேர்ந்த சிலர் நேற்று காலை, அருகில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போது, ஆற்று தண்ணீரில் தெரிந்த சிலையை வெளியில் எடுத்தனர். அது, 3 அடி உயரம் கொண்ட, தலையில்லா அம்மன் கற்சிலையும். ஒரு அடி உயரம் கொண்ட பலிபீடமும் இருந்தது.இரண்டு சிலைகளையும், டிராக்டர் மூலம் கொண்டு சென்று, கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் வைத்து வழிபட்டனர். இதுபற்றி தகவலறிந்த போலீசார் மற்றும் வி.ஏ.ஓ., ராஜேஷ் ஆகியோர், சம்பவ இடத்திற்கு சென்று, சிலைகளை மீட்டு, காட்டுமன்னார்கோவில் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.சமீபத்தில், கொள்ளிடம் ஆற்றில் சுமார் 1.5 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அப்போது, ஆற்றங்கரையோரம் உள்ள கோவிலில் இருந்து, இந்த சிலைகள் அடித்து வரப்பட்டு மண்ணில் புதைந்திருக்கலாம் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை