கடலுார் நகரில் நாய் தொல்லை வாகன ஓட்டிகள் பாதிப்பு
கடலுார்: கடலுார் மாநகராட்சியில் சாலையில் சுற்றித்திரியும் நாய்களால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.கடலுார் மாநகராட்சியில் உள்ள அனைத்து தெருக்களிலும் நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. சாலையில் சுற்றித்திரியும் நாய்கள் பொதுமக்களைவிரட்டி சென்று கடிப்பதோடு, வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தி வருகின்றது. நாய்துரத்தும்போது, சில வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்திலும் சிக்கி காயமடைந்துவருகின்றனர்.எனவே, நகரில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.