உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தெருநாய் கடியால் பாதிப்போர் அதிகரிப்பு

தெருநாய் கடியால் பாதிப்போர் அதிகரிப்பு

மந்தாரக்குப்பம் : கெங்கைகொண்டான் பேரூராட்சியில் தெருநாய் கடியால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.கெங்கைகொண்டான் பேரூராட்சியில் கணபதி நகர், பாலாஜி நகர், எஸ்.பி.டி.எஸ்., நகர், கே.வி.ஆர்., நகர், வியாபாரிகள் வீதி, சின்னசாமிநாயுடு நகர், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி வழியாக நடந்து செல்பவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் துரத்தி சென்று கடிக்கிறது. இதனால் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் இரவு நேரத்தில் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. தற்போது கெங்கைகொண்டான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினசரி 5 பேர் நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கடந்த சில மாதமாக 100 க்கும் மேற்பட்டவர்கள் தெருநாய் கடிக்கு தடுப்பு ஊசி போட்டுள்ளனர். எனவே தெரு நாய்களை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை