உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பயிற்சி வகுப்பு துவக்கம்

பயிற்சி வகுப்பு துவக்கம்

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் அறிவியல் புலத் தில் சி.எஸ்.ஐ.ஆர்., ஜே.ஆர்.எப்., நெட் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் துவங்கியது. அறிவியல் புல தலைவர் ஸ்ரீராம் தலைமை தாங்கினார்.பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலர் ராஜேந்திர பிரசாத் வரவேற்றார். அரசியல் துறைத் தலைவர் சுபஸ்ரீ, கணித துறைத் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் பயிற்சி வகுப்புகளின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர். பல்கலைக்கழக பயிற்சி, வேலைவாய்ப்பு இயக்குனர் கிருஷ்ணசாமி, உதவி இயக்குநர் பத்மநாபன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !