அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கல்
கிள்ளை : கிள்ளை அடுத்த பின்னத்துார் ஊராட்சியில், அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.ஒன்றிய செயலாளர் அசோகன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் ரெங்கம்மாள், மாவட்ட துணை செயலாளர் செல்வம், ஒன்றிய அவைத் தலைவர் ரெங்கசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு பாண்டியன் எம்.எல்.ஏ., உறுப்பினர் அட்டை வழங்கினார். கிள்ளை நகர செயலாளர் தமிழரசன், முன்னாள் துணை சேர்மன் முடிவண்ணன், நிர்வாகிகள் இதயதுல்லா, சதகத்துல்லா, சரவணன், பாலமுருகன், சிவக்குமார், காளிமுத்து, ராமச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.