ஜெ., பிறந்தநாள் பொதுக்கூட்டம்
நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டில் கடலுார் தெற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் ஜெ., 77வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.கூட்டத்தில் கடலுார் மேற்கு ஒன்றிய செயலாளர் வினோத் வரவேற்றார்.ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தராஜ்,பாஷியம்,கமலக்கண்ணன்,பாபு முன்னிலை வகித்தனர்.மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமலிங்கம் விழா துவக்க உரையாற்றினார். விழாவில் கடலுார் தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன் தலைமை தாங்கி பேசினார்.நிகழ்ச்சியில் செய்திதொடர்பாளர் அதிவீரராமபாண்டியன்,தலைமை கழக பேச்சாளர் அப்துல் ஜலீல்,மாநில அம்மா பேரவைதுணை செயலாளர் சிவசுப்பரமணியன், மாவட்ட அவைத்தலைவர் முத்துலிங்கம், மாவட்ட துணை செயலாளர் கோவிந்தராஜ், பொருளாளர் தேவநாதன், நகர செயலாளர் கோவிந்தராஜ்,மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் சுப்பரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பிரதிநிதி குருநாதன் நன்றி கூறினார்.