விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில், இரண்டாம் கட்ட கலந்தாய்வு 24ம் தேதி துவங்குகிறது.விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2024 - 25ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை சிறப்பு கலந்தாய்வு மற்றும் முதல்கட்ட கலந்தாய்வு கூட்டம் முடிவடைந்தது. அதையடுத்து, வரும் 24 முதல் 27ம் தேதி வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடக்கிறது. அதன்படி, வரும் 24ம் தேதி பி.எஸ்.சி., கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல் பாட பிரிவுகளில் 175 மதிப்பெண்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது.25ம் தேதி, பி.காம்., பி.பி.ஏ., பாடப்பிரிவுகளில 175 மதிப்பெண் பெற்றவர்களுக்கும், 26ம் தேதி, பி.ஏ., வரலாறு, பி.ஏ., பொருளாதாரம் பாடப்பிரிவுகளில் 175 மதிப்பெண் பெற்றவர்களுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.27ம் தேதி, பி.ஏ., தமிழ் பாடத்தில் 60 மதிப்பெண்கள் பெற்றவர்களும்; பி.சி., பி.சி.எம்., எஸ்.சி.ஏ., எஸ்.டி., பிரிவுகளில் விண்ணப்பித்த அனைவரும் பங்கேற்க வேண்டும்.அதேபோல், அன்றைய தினம் (27ம் தேதி), பி.ஏ., ஆங்கிலம் (ஷிப்ட் 1), பி.ஏ., ஆங்கிலம் (ஷிப்ட் 2) விண்ணப்பித்தவர்கள் பங்கேற்க வேண்டும்.கலந்தாய்வுக்கு வரும் மாணவ, மாணவிகள் கல்விச்சான்றிதழ்கள், ஜாதி சான்றிதழ், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போட் சைஸ் போட்டோ, ஆதார் அட்டை, வங்கிக்கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல் மற்றும் 3 நகல்களும், இணையவழி விண்ணப்பத்தின் பிரதியையும் எடுத்து வர வேண்டும்.மேலும், விண்ணப்பித்த மாணவர்கள் சுழற்சி 1ல் காலை 9:30 மணிக்கும், சுழற்சி 2ல், மதியம் 1:30 மணிக்கும் தரவரிசை அடிப்படையில் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்கவும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.