மேலும் செய்திகள்
பா.ஜ., உறுப்பினர் சேர்ப்பு பயிலரங்கம்
29-Aug-2024
பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுாரில் பா.ஜ., மாவட்ட அளவிலான உறுப்பினர் சேர்க்கை பயிலரங்கம் நடந்தது.சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் மற்றும் விழுப்புரம் கோட்ட அமைப்பு செயலாளர் பங்கேற்றனர். கூட்டத்தில் மேற்கு மாவட்ட தலைவர் பங்கேற்காத நிலையில், அவருக்கு எதிராக, ஒன்றிய நிர்வாகிகள் கோஷமிட்டனர். 'லோக்சபா தேர்தலுக்கு பிறகு மாவட்ட தலைவர் நிர்வாகிகளை மதிக்கவில்லை' என, சரமாரியாக குற்றச்சாட்டுகளை அடுக்கினர். இதற்கு, மாவட்ட தலைவர் தரப்பு எதிர்ப்பு தெரிவிக்க, மாவட்ட தலைவர் ஆதரவாளர்களுக்கும், ஒன்றிய தலைவர் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதனால், கடுப்பான சிறப்பு அழைப்பாளர்கள் உறுப்பினர் சேர்க்கை பயிலரங்கத்தில் இருந்து விருட்டென கிளம்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
29-Aug-2024