மேலும் செய்திகள்
இடு பொருட்களுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை
09-Sep-2024
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த சி,சாத்தமங்கலம் வேளாண் விரிவாக்க மையத்தில் மின்னணு பணமில்லா பரிவர்த்தனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.கீரப்பாளையம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் அமிர்தராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு;கடலுார் மாவட்டம் , கீரப்பாளையம் வேளாண் விரிவாக்க மையம் சி.சாத்தமங்கலம் அலுவலகத்தில் இன்று மின்னணு பண பரிவர்த்தனை முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.தமிழகத்தில் வருவாய், பத்திரப்பதிவுத்துறைகளில் உள்ளது போன்று வேளாண் துறைகளிலும் மின்னணு பண பரிவர்த்தனை வசதி துவக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள தகவல் தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்மை துறையில் வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் மின்னனு பண பரிவர்த்தனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதனை செயல்படுத்தும் வகையில் கீரப்பாளையம் வேளாண் விரிவாக்கம் மையம் சி,சாத்தமங்கலம் அலுவலகத்தில் பி.ஓ.எஸ்., கியூ.ஆர் கோடு ஆகியவை வைக்கப்பட்டுள்ளது.இந்த சேவையை விவசாயிகள் அனைவரும் பயன்படுத்தி ஏ.டி.எம்., கார்டு, கூகுள்பே, பே போன் மூலம் இடுபொருட்களை பெறமுடியும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
09-Sep-2024