உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மது பாட்டில்கள் விற்றவர் கைது

மது பாட்டில்கள் விற்றவர் கைது

திட்டக்குடி : ராமநத்தம் அருகே கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில்களை விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.ராமநத்தம் சப்இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் போலீசார், நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ம.புடையூர் கிராமத்தில், கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில்களை விற்றுக் கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த கொளஞ்சிநாதன், 50, என்பவரைக் கைது செய்தனர். அவரது மொபட் பெட்டியில் விற்பனைக்காக வைத்திருந்த 26 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இதுகுறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை