உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கூழாங்கற்கள் ஏற்றி வந்த லாரி பறிமுதல்  

கூழாங்கற்கள் ஏற்றி வந்த லாரி பறிமுதல்  

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே கூழாங்கற்கள் ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது. சேத்தியாத்தோப்பு அடுத்த குமாரக்குடி பைபாஸ் சாலை உயர்மட்ட பாலத்தின் கீழ், நேற்று அதிகாலை 5:00 மணியளவில் சுரங்கத்துறை உதவி இயக்குனர் செல்வக்குமார் தலைமையில் அதிகாரிகள் குமாரக்குடி உயர்மட்ட பாலத்தின் கீழ் வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை அதிகாரிகள் மடக்கிய போது அதை ஓட்டி வந்த லாரி டிரைவர் கீழே குதித்து தப்பியோடினார். லாரியை சுரங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து சுரங்கத்துறை உதவி இயக்குனர் செல்வக்குமார் கொடுத்த புகாரின்பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப்பதிந்து, இரண்டரை யூனிட் கூழாங்கற்கள் ஜல்லியுடன் லாரியை பறிமுதல் செய்தனர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை