உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கூழாங்கற்கள் கடத்தி சென்ற லாரி பறிமுதல்

கூழாங்கற்கள் கடத்தி சென்ற லாரி பறிமுதல்

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே கூழாங்கற்கள் கடத்தி சென்ற லாரியை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.  புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் செல்வசேகர் தலைமையிலான அதிகாரிகள் நேற்று தே.கோபுராபுரம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த மினி லாரியை சோதனை செய்தனர். அதில், அனுமதியின்றி 2 யூனிட் கூழாங்கற்கள் கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, விருத்தாசலம் போலீசாரிடம் லாரியை ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில்,  விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, லாரியை பறிமுதல் செய்து, தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ