உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மா.கம்யூ., போராட்டம்

மா.கம்யூ., போராட்டம்

கடலுார்: கடலுார் தாலுகா அலுவலகம் முன், மா.கம்யூ., கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.மாநகர செயலாளர் அமர்நாத் தலைமை தாங்கினார், ஒன்றிய செயலாளர் பஞ்சாட்சரம்,சிப்காட் செயலாளர் சிவானந்தம் முன்னிலை வகித்தனர். மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆளவந்தார், பக்கீரான் பேசினர்.இதில், கடலுார் தாலுகாவில்மனைப்பட்டா இல்லாத அனைத்து பகுதி மக்களுக்கும் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். கலைஞர் வீடு கட்டும் திட்டத்தை நகர்ப்புறங்களுக்கும் விரிவாக்கம் செய்யவேண்டும். மாநகராட்சியில் கோவில் இடங்களில் குடியிருக்கும் மக்களுக்கு வாடகை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.அப்போது, நிர்வாகிகள் ஸ்டாலின், தமிழ்மணி, வைத்தியலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ