மேலும் செய்திகள்
நிகும்பலா யாகம்
03-Sep-2024
கும்பாபிஷேக ஆண்டு விழா..
24-Aug-2024
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு, கைலாசநாதர் கோவில், முத்துமாரியம்மன் கோவில் மற்றும் புதிய ராஜகோபுர மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.விழா கடந்த 10ம் தேதி கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. தொடர்ந்து யாக சாலை பூஜைகள் நடந்து வந்தன. நேற்று காலை 5:00 மணிக்கு 6ம் கால யாகசாலை பூஜை, 7:15 மணிக்கு மகா தீபாராதனை நடந்து, யாகசாலையில் வைக்கப்பட்ட கலசங்கள் ஆலய உலாவாக வந்து 7:45 மணிக்கு முத்துமாரியம்மன் கோவில் ராஜகோபுரம், மூலவர் கோபுரம் மகா கும்பாபிஷேகம் நடந்தது. 8:00 மணிக்கு மூலவர் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.தொடர்ந்து 10:30 மணிக்கு காமாட்சியம்மன், கைலாசநாதர் ராஜகோபுரம், மூலவர் கோபுரம் கும்பாபிஷேகம் நடந்தது. 10:45 மணிக்கு மூலவர் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம், திருப்பணிக்குழு தலைவர் ராஜாமணி தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.விழாவில் கடலுார் கிரின்டெக் பள்ளி பொருளாளர் ராமலிங்கம், முருகன் மளிகை உதயகுமார், கண்ணன் மெடிக்கல் சூரியபிரகாஷ், மலையாண்டவர் கேஷ்யூஸ் தர்மலிங்கதயாளன், ஏ.பி.எஸ்., டிராவல்ஸ் அழுகுவேல், ஒன்றிய கவுன்சிலர் சுதாகர், எம்.எஸ்.என்., டிவி சேனல் உரிமையாளர் முருகசாமி, டி.எம்.தண்டபாணி திருமணமண்டப உரிமையாளர் வெங்கடேசன், அமிர்தா பெயிண்ட்ஸ் தயாநிதி, ராஜலட்சுமி பேப்பர் மார்ட் ஆறுமுகம், முன்னாள் அறங்காவலர் ராஜவேல், லட்சுமி டிரேடர்ஸ் வினோத், ராசிபேங்கர்ஸ் கணேசன், ஆடிட்டர் வேல்முருகன், பாலு டெக்ஸ் சிங்காரவேல், மல்லிகா டெக்ஸ் சண்முகவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.
03-Sep-2024
24-Aug-2024