உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மகா சிவராத்திரி விழா: கடலுாரில் ஒளிபரப்பு

மகா சிவராத்திரி விழா: கடலுாரில் ஒளிபரப்பு

கடலுார்: கோயம்புத்துார் ஈஷா யோகா மையத்தில் நடக்கும் மகா சிவராத்திரி விழா, கடலுாரில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.கடலுார் ஈஷா யோகா மையம் ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் அறிக்கை;கோயம்புத்துார் வெள்ளியங்கிரியில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி, வரும் 26ம் தேதி ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவை, கடலுார் மக்கள் பார்க்க திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவில் அருகில் உள்ள ஆயிர வைசிய திருமண மண்டபத்தில் நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இலவச அனுமதியில், பொதுமக்கள் கலந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை