உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பு.முட்லுார் பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம்

பு.முட்லுார் பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம்

பரங்கிப்பேட்டை,: பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.தலைமை ஆசிரியர் வேல்முருகன் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவராக, போட்டியின்றி மீண்டும் சாந்தினி ராகேஷ், துணை தலைவராக மாலதி மற்றும் 21 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.புதிய நிர்வாகிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.கூட்டத்தில், பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் முத்துப்பெருமாள், ஊராட்சி தலைவர் ஜெயசீலன், முன்னாள் மாணவர்கள் ராகேஷ், சுந்தரமூர்த்தி, சீனிவாசன், அன்பரசன், ராஜசேகர், கருணாகரன் மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி