தி.மு.க., நிர்வாகிகளுக்கு அமைச்சர் அழைப்பு
சிறுபாக்கம்: முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, தி.மு.க., இளைஞரணி நடத்தும் பேச்சு போட்டியில் நிர்வாகிகள் பங்கேற்க தி.மு.க., மேற்கு மாவட்ட செயலர், அமைச்சர் கணேசன் அழைப்பு விடுத்துள்ளார்.அவரது அறிக்கை; தி.மு.க., கடலுார் மேற்கு மாவட்ட இளைஞரணி சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழா பேச்சு போட்டி விருத்தாசலம் பூதாமூர் � சிவா மஹாலில் இன்று (24ம் தேதி) காலை 8:00 மணியளவில் நடக்கிறது. இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் கணேஷ்குமார், மாவட்ட துணை அமைப்பாளர் மண்டல பொறுப்பாளர் அப்துல் மாலிக், வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா, பத்மப்ரியா, தக்கோலம் தேவபாலன் மற்றும் பதிவு செய்த மாணவர்கள் பங்கேற்கின்றனர்.இதில், மேற்கு மாவட்ட நிர்வாகிகள், நகர, பேரூர், ஒன்றிய செயலர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள், இன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்கள், நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.