உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் வந்த முதல்வருக்கு அமைச்சர் தலைமையில் வரவேற்பு

கடலுார் வந்த முதல்வருக்கு அமைச்சர் தலைமையில் வரவேற்பு

கடலுார் : கடலுார் மாவட்டம் வந்த முதல்வருக்கு, அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.கடலுார் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த விழாவில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் மற்றும் புதிய திட்டபணிகளை துவக்கி வைத்தும், முடிவடைந்த திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.கடலுார் வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு, வேளாண் அமைச்சரும், கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலாளருமான பன்னீர்செல்வம் தலைமையில், மாவட்ட எல்லையான ரெட்டிச்சாவடி முதல் வடலுார் வரையில், வழிநெடுக தொண்டர்கள் நிர்வாகிகள் திரண்டு வரவேற்பு அளித்தனர்.கடலுார் ஆல்பேட்டை செக்போஸ்டில், கிழக்கு மாவட்ட தி.மு.க., பொருளாளர் கதிரவன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.இதில் மாநகர துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, பகுதி செயலாளர் நடராஜன், சலீம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி