பொது மருத்துவ முகாம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
கடலுார்: கடலுார் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் புரசைவாக்கம் பாலாஜி மருத்துவமனை சார்பில் இலவச பொது மருத்துவமுகாம் நடந்தது.உண்ணாமலைச்செட்டிசாவடியில் நடந்த முகாமில் கூட்டமைப்பு தலைவர் பச்சையப்பன் தலைமை தாங்கினார். சிறப்பு தலைவர் மருதவாணன், துணை தலைவர் ரங்கநாதன் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார்.அய்யப்பன் எம்.எல்.ஏ., மற்றும் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், தாசில்தார் பலராமன் முகாமை துவக்கி வைத்தனர். கண் பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது.கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், முன்னாள் ஊராட்சி தலைவர் சுதாகர், ஜோதி நகர் நலச்சங்க தலைவர் ஜெகநாதன், பொருளாளர் குமார், கூட்டமைப்பு இணை பொதுச்செயலாளர் தேவநாதன், ஊராட்சி செயலாளர் வேலவன், வத்சலா ரமணி பங்கேற்றனர்.பொருளாளர் வெங்கட்டரமணி நன்றி கூறினார்.