உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தேசிய பாதுகாப்பு தினம் 

தேசிய பாதுகாப்பு தினம் 

சிதம்பரம்; சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வேதிப்பொறியியல் துறையில் தேசிய பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது. வேதிப்பொறியியல் துறைத் தலைவர் சரவணன் வரவேற்றார். பொறியியல் மற்றும் தொழில்நுட்ப புல முதல்வர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். பதிவாளர் (பொறுப்பு) பிரகாஷ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தீயணைப்பு மற்றும் மீட்புக் குழு பணியாளர்களை கவுரவித்தார். விபத்துகளைத் தடுப்பது, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்து பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றனர். சிதம்பரம் தீயணைப்பு துறை நிலைய அதிகாரி மணிமாறன் தலைமையிலான குழுவினர் பேரிடர்களின் போது தீயை அணைத்தல் மற்றும் மீட்பு நுட்பங்கள் குறித்து செயல்விளக்க நிகழ்வை நடத்தி காண்பித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை