உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஸ்ரீ பவானி பார்மசி கல்லுாரியில் தேசிய கருத்தரங்கு

ஸ்ரீ பவானி பார்மசி கல்லுாரியில் தேசிய கருத்தரங்கு

விருத்தாசலம்: வேப்பூர் அடுத்த கண்டப்பங்குறிச்சி ஸ்ரீ பவானி பார்மசி கல்லுாரியில், மூன்றாவது தேசிய கருத்தரங்கு நடந்தது.நிகழ்ச்சிக்கு, நிறுவன தலைவர் நாராயணன், செயலாளர் மகாலட்சுமி நாராயணன் துவக்கி வைத்தனர். மருந்தியல் துறை வல்லுனர் டாக்டர் கவிமணி, புதுச்சேரி மதர் தெரசா பல்கலை., டாக்டர் கதிரேசன், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக டாக்டர் ஜெயராமன் ஆகியோர் மருந்தியல் துறையின் மாற்றங்கள், முன்னேற்றம் குறித்து விளக்கி பேசினர்.கருத்தரங்கில் நிர்வாக அலுவலர் பொன்சடையமுத்து, பார்மசி கல்லுாரி முதல்வர் செந்தில் உட்பட பேராசிரியர்கள் முன்னிலை வகித்தனர். விருத்தாசலம், அதனைச் சுற்றியுள்ள கல்லுாரிகளை சேர்ந்த மாணவிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி