உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வீரட்டானேஸ்வரர் கோவில் திருப்பணியில் அலட்சியம்

வீரட்டானேஸ்வரர் கோவில் திருப்பணியில் அலட்சியம்

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் திருப்பணி துவங்குவதற்கான பாலாலயணம் செய்து 45 நாட்களுக்கு மேலாகியும் பணி துவங்கப்படவில்லை.பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில், 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அப்பர் சுவாமிகள் பாடல் பெற்ற ஸ்தலமாகும். இக்கோவில் கும்பாபிேஷகம் கடந்த 2012ம் ஜூன்.,1ம்தேதி நடந்தது. கும்பாபிேஷகம் நடந்து 12 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் அறநிலையத்துறை சார்பில் கும்பாபிேஷகம் நடத்த திருப்பணி பாலாயணம் கடந்த ஜூலை 11ம் தேதி நடந்தது. 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் திருப்பணிக்கான எந்த பணியும் நடைபெறவில்லை. இன்னும் ஒரு மாதங்களில் மழைக்காலம் துவங்கிவிடும் என்பதால் பணிகள் செய்வதில் பாதிப்பு ஏற்படும்.திருப்பணியில் முக்கிய பணி ராஜகோபுரம் பணி, இப்பணியை துவக்குவதில் காலதாமதம் ஏற்பட்டால் பணிகள் முடிவடைய ஒராண்டிற்குமேல் ஆகிவிடும். எனவே, அறநிலையத்துறை அதிகாரிகள், இனியும் அலட்சியம் காட்டாமல், பணியை விரைந்து துவக்க பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி