மேலும் செய்திகள்
முதலைகள் விட இடமின்றி தவிக்கும் வனத்துறை
28-Aug-2024
சிதம்பரம்: சிதம்பரத்தில், ஆக்கிரமிப்பு அகற்றியதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் வழங்க கோரி, 31ம் தேதி அறிவிக்கப்பட்ட போராட்டம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.சிதம்பரத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பில் இருந்ததாக தில்லையம்மன்கோவில் தெரு, தில்லையம்மன்ஓடை, ஞானப்பிரகாசம் குளக்கரை, அண்ணாதெரு உள்ளிட்ட பகுதியில் இருந்த வீடுகள் அகற்றப்பட்டன. அவர்களுக்கு மாற்று இடம் வழங்காத நிலையில், வரும் 31 ம்தேதி, சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகம் எதிரில், மா.கம்யூ., மாநிலசெயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடத்த அறிவிக்கப்பட்டது.இது தொடர்பாக நேற்று, சிதம்பரம் தாசில்தார் ேஹமா ஆனந்தி தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது.சிதம்பரம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு, சப் இன்ஸ்பெக்டர் பரணிதரன், மா.கம்யூ., நகர செயலாளர் ராஜா, நகர்மன்றத் துணைத் தலைவர்முத்துக்குமரன் மற்றும் கலியமூர்த்தி மற்றும் வீடு இழந்து பாதிக்கப்பட்டவர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், 15 நாட்கள்அவகாசம் வேண்டும் எனவும், அதுவரை போராட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொள்ளாத போராட்ட குழுவினர், கடந்த 6ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை வைத்தும் , அதிகாரிகள் நடவடிக்கை இல்லை, எனவே31ம் தேதி, திட்டமிட்டபடி, பாதிக்கப்பட்ட மக்களுடன் காத்திருப்புபோராட்டம் நடைபெறும். போராட்டத்தின் போது சரியான முடிவு எட்டப்படவில்லையெனில்இரவு, பகல் பாராமல் காத்திருப்புபோராட்டம் தொடரும் என, கூறிவிட்டு வெளியேறினர். இதனால், பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டாததால் தோல்வியல் முடிந்தது.
28-Aug-2024