மேலும் செய்திகள்
அரசு ஊழியர்களுக்கு கிரிக்கெட் போட்டி
08-Jul-2026
கடலுார்: கடலுார் சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை செவிலியர்கள் சங்கம் சார்பில் ஆர்பபாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சீதாலட்சுமி தலைமை தாங்கினார். செயலாளர் ஜீவிதா, பொருளாளர் மஞ்சு பார்கவி முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் வெங்கடாஜலபதி, தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் காசிநாதன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். செவிலியர் பணியிடங்களை தமிழக அரசு மறுபகிர்வு செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும்; கிராமப்புற மருத்துவ சேவையை மேம்படுத்தி பொதுமக்களுக்கு தரமான இலவச சிகிச்சை கிடைக்க அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 6 செவிலியர்களை பணியமர்த்த வேண்டும்; என்பன, உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
08-Jul-2026