உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஊராட்சி செயலர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

ஊராட்சி செயலர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

கடலுார் : கடலுார் மாவட்ட தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.கடலுாரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில துணை செயலாளர் வேலன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் சீத்தாராமன், ரங்கசாமி முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகிகள் கருணாமூர்த்தி, கண்ணன், பாலகிருஷ்ணன் கண்டன உரையாற்றினர். இதில், முறையான காலமுறை ஊதியம் பெறும் ஊராட்சி செயலர்களை அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும். பதிவறை எழுத்தர்களுக்கான அரசு சலுகைகள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.நிர்வாகிகள் ரமேஷ், திருவேங்கடம், ராதா, தேவநாதன், வேல்முருகன், குமரேசன், அன்பரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை