ரயில்வே சாலையில் கும்மிருட்டு பண்ருட்டியில் பயணிகள் அவதி
பண்ருட்டி: பண்ருட்டி ரயில்வே சாலையில் தெருவிளக்குகள் எரியாமல், ரயில் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.பண்ருட்டி ரயில்வே நிலையம் செல்லும் ரயில்வே பீடர் ரோடு, மேம்பாலம் கீழ் அம்பேத்கார் சாலை வழியாக உள்ள பகுதியில் தெருவிளக்குகள் கடந்த ஒரு மாதமாக எரியவில்லை. கடந்த சில மாதங்களாக பண்ருட்டி ரயில் நிலையத்தில் சிறப்பு ரயில்கள் அவ்வபோது இரவு நேரங்களில் நின்று செல்கின்றனர்.இதில் இருந்து பயணிகள் இறங்கி செல்லும் போது பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. எனவே, ரயில் பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பண்ருட்டி ரயில் நிலையம் செல்லும் சாலையில் தெரு விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.