உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போதையில் வாகனம் ஓட்டிய டிரைவர்களுக்கு அபராதம்

போதையில் வாகனம் ஓட்டிய டிரைவர்களுக்கு அபராதம்

கடலுார்: கடலுாரில் அதிகாலையில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 8 டிரைவர்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து அபராதம் விதித்தனர்.கடலுார் தலைமை தபால் நிலையம் அருகே நேற்று அதிகாலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அருள்செல்வன், சப் இன்ஸ்பெக்டர்கள் மகாலிங்கம், ராமச்சந்திரன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, புதுச்சேரியில் இருந்து கடலுார் நோக்கி வந்த ஒரு தனியார் பஸ் டிரைவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது வழக்கு பதிந்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும், அவர் மேற்கொண்டு பஸ்சை இயக்க விடாமல், மாற்று டிரைவர் வரவழைக்கப்பட்டு பஸ் இயக்கப்பட்டது. இதேபோன்று, 2 டாடா ஏஸ், 2 மினி சரக்கு வாகனம், 2 ஆட்டோக்கள், ஒரு லாரியை இயக்கிய டிரைவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. அவர்களுக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை