கடலுாரில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு; மின் துண்டிப்பால் மக்கள் அவதி
கடலுார்: கடலுாரில் பெஞ்சல் புயல் காற்றின் வேகத்தால் குண்டு சாலை மற்றும் ஜட்ஜ் பங்களா சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பெஞ்சல் புயல் தாக்கம் காரணமாக கடலுாரில் மழை மற்றும் காற்றின் வேகத்தால் மரங்கள் பேயாட்டம் ஆடின. குண்டு சாலை ரோட்டில் தைல மரம் விழுந்ததில் மின்கம்பி அறுந்தது.உடனடியாக மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்தனர். போக்குவரத்து போலீசார், நெடுஞ்சாலை துறையினர் சாலையில் விழுந்த மரத்தை அகற்றிய பின்னர் போக்குவரத்து சீரானது.இரவு 7:00 மணிக்கு ஜட்ஜ் பங்களா சாலையில் வேப்பமரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்பு மற்றும் போலீசார், மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். கடலுாரில் மாலை 3:00 மணியில் இருந்தே மழை பெய்ய துவங்கியது. அதனால் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது. கிராம பகுதிகளில் மின் சப்ளை முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலுாரில் இருந்து சென்னைக்கு செல்லும் 58 பஸ்கள் இயக்கப்படவில்லை.