உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சூதாட்ட கும்பலிடம் போலீஸ் அட்ஜெஸ்மண்ட்

சூதாட்ட கும்பலிடம் போலீஸ் அட்ஜெஸ்மண்ட்

மாவட்டத்தில், கடைகோடி போலீஸ் சப் டிவிஷனுக்குட்பட்ட, பெரம்பலுார் மாவட்டத்தையொட்டி உள்ள போலீஸ் நிலைய பகுதியில் பல லட்சம் ரூபாய் வைத்து சூதாட்டம் நடந்து வருகிறது. இதற்காக, வெளி மாவட்டம் மற்றும் வெளியூரில் இருந்து முக்கிய புள்ளிகள் பலரும் கார், பைக்கில் வருகின்றனர். சரகத்திற்குட்பட்ட பகுதியை சேர்நத முக்கிய புள்ளி ஒருவர் இதற்கு ஏற்பாடுகளை செய்து வருகிறார்.சூதாட்டம் நடப்பது குறித்து தகவலறிந்து இரு வாரங்களுக்கு முன் அங்கு சென்ற போலீசார், திடீர் ரெய்டு நடத்தி கார், பைக், ரொக்கத்தை பறிமுதல் செய்து, ஒரு சிலரை கைது செய்தனர். ஆனால், ஒருங்கிணைப்பாளர் ஸ்டேஷனை 'வெயிட்' ஆக கவனித்து, சூதாட்ட கும்பல் மற்றும் வாகனங்களை மீட்டு சென்றார். போலீசாரும், அவர்கள் மீது கரிசனம் காட்டி, சாதாரண வழக்கு போட்டு, சூதாட்ட வழக்கை முடிச்சுட்டாங்களாம். இதனால், தற்போது, இடத்தை மாத்தி சர்வ சாதாரணமாக சூதாட்டிம் நடப்பதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ