உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கட்டணத்தை திடீரென உயர்த்திய தனியார் பஸ்கள்

கட்டணத்தை திடீரென உயர்த்திய தனியார் பஸ்கள்

கடலுார்-சிதம்பரம் வழித்தடத்தில் 15க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. 2018ம் ஆண்டு அரசு உயர்த்தப்பட்ட பஸ் கட்டணபடி, கடலுாரில் இருந்து சிதம்பரத்திற்கு ரூ. 31 வசூலிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் கழித்து டீசல் உயர்வை காரணம் காட்டி ரூ. 1 உயர்த்தி, ரூ. 32 கட்டணம் வசூலித்தனர். இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் பயணிகள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில், விழுப்புரம்-நாகப்பட்டினம் நான்கு வழி சாலையில் கொத்தட்டை அருகே டோல்கேட் அமைக்கப்பட்டு கடந்த டிசம்பர் முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதை காரணமாக கூறி, பஸ் உரிமையாளர்கள், கடலுார்- சிதம்பரம் பஸ்களில் திடீரென ரூ. 3 உயர்த்தி, தற்போது, ரூ. 35 வசூலிக்கப்படுகிறது. அரசு அறிவிப்பு இல்லாமலே, கடலுார் - சிதம்பரம் வழித்தடத்தில் திடீர் பஸ் கட்டணம் உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பஸ் கட்டண உயர்வு குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், கட்டண உயர்வு பற்றி எதுவும் தெரியாது, விசாரிக்கிறோம் என கூலாக பதில் தெரிவித்தனர். எனவே, சாதாரண பொதுமக்கள் பாதிக்கும் வகையில் உயர்த்தப்பட்ட பஸ் கட்டண உயர்வு குறித்து மாவட்ட நிர்வாகம், வட்டார போக்குவரத்து துறை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ